மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆரம்பம் மற்றும் பரிணாமம்
இலங்கையில் கூட்டுறவு அபிவிருத்தியானது 100 வருட கால நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கிராமிய சிறு விவசாயிகள் மற்றும் சிறு தொழில் வல்லுணர்களின் கடன் சேகரிப்பு, வணிகப் பிரச்சினைகள் மற்றும் பிற சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வாக இது ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் பெரும்பாலான மக்கள் கிராமப் புறங்களிலேயே வாழ்கின்றனர். ஆரம்பத்திலிருந்து, கூட்டுறவுத் தொழில் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்கு பல்வேறு பங்களிப்புக்களைச் செய்து வருகின்றது. கிராமப்புற நுகர்வோருக்கு அத்தியாவசிய மற்றும் சத்துணவுப் பொருட்களின் விநியோகம், உலர் உணவுகள் மற்றும் ஏழைகளுக்கான நிவாரணம் வழங்கள், சிக்கனம், சேமிப்பு ஊக்குவிப்பாளராகவும், முதலீட்டாளராகவும் செயல்படுதல், சமூக மாற்றீடாக செயல்படுதல் (கல்வி மற்றும் பயிற்சியளித்தல்), வறுமையைக் குறைக்கும் முகமாக தொழில் வழங்குனராக செயற்படுதல், தேசிய பேரழிவுகள், இயற்கை அழிவுகளின் போது நிவாரண வசதிகளை வழங்குதல், கிராமப்புற கடனுக்கான தீர்வு வழங்கல், பொது மக்களின் வாழ்க்கைச் சுமையைத் தணிக்க மற்றும் தேசிய வருவாயின் வளர்ச்சிக்கு சாதகமான பங்களிப்பை வழங்கள் போன்றவை கூட்டுறவுத் துறையின் பிரதான பங்களிப்புகளாக காணப்படுகின்றது.
1977 ஆம் ஆண்டு முதல் இலங்கை பொருளாதாரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார வரையறையின் காரணமாக இலங்கை கூட்டுறவுத் தொழில் ஓரளவு பின்னடைவை சந்தித்ததுடன், திறந்த பொருளாதாரத்தின் காரணமாக இன்றைய போட்டிச் சந்தைக்கு முகங்கொடுக்க முடியாமை கூட்டுறவுத் துறையின் அபிவிருத்திக்கு பெரும் தடையானமை குறிப்பிடத்தக்கது.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் கூட்டுறவுத் துறையின் பணிகளின் பெரும் பகுதி மாகாண சபைகளுக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் மத்திய அரசின் தேசிய கொள்கையின் அடிப்படையில் மாகாண பொருளாதார/சமூக மற்றும் கலாச்சார அபிவிருத்திக்காக சாத்தியமான வளங்களை திறம்பட பயன்படுத்துவது மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும்.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் (மேல் மாகாணம்)
மேல் மாகாண சபையின் 2011 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க கூட்டுறவுச் சங்க (திருத்தப்பட்ட) நியதிச்சட்டத்தின் திருத்தப்பட்டுள்ள மேல் மாகாண சபையின் 1998 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க கூட்டுறவுச் சங்க நியதிச்சட்டத்திற்கு அமைய மேல் மாகாணத்தில் கூட்டுறவுத் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல், கூட்டுறவு அமைப்புக்களை மேற்பார்வை செய்தல், கணக்காய்வு மற்றும் ஆலோசனை வழங்குதல், நிதி தொழிநுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், கூட்டுறவு கல்வி வசதிகளை வழங்குதல் மற்றும் நல்லாட்சியின் முன்னுறிமை குறிக்கோளை வெற்றியடையச் செய்வதற்காக மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகங்கள் மூன்று இயங்குகின்றது. மேலும் 2010/06 ஆம் இலக்க கூட்டுறவுச் சேவையாளர் ஓய்வூதிய நியதிச்சட்டத்தின் கீழ் கூட்டுறவுச் சேவையாளர் ஓய்வூதியப் பிரிவு இயங்குகின்றது.
மேல் மாகாண சபையின் மூலம் நிறைவேற்றப்பட்ட 2010/06 ஆம் இலக்க மேல் மாகாண கூட்டுறவுச் சேவையாளர் ஓய்வூதிய நியதிச்சட்டத்தின் கீழ் 56 மில்லியன் ரூபா மூலதனத்தினைப் பயன்படுத்தி மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதற்காக ஓய்வூதிய உரிமத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், 2017 ஆம் ஆண்டு நவம்பர மாதமளவில் 3610 ஊழியர்கள் இதில் உறுப்பினர்களாக தம்மைப் பதிவு செய்துக் கொண்டனர். இன்றுவரை ஓய்வூ பெற்ற 325 கூட்டுறவு சேவையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 1412 கூட்டுறவுச் சங்கங்கள் மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம், சிக்கன மற்றும் கடன் வழங்கள் கூட்டுறவுச் சங்கம், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி, பால், பள்ளிகள், மருத்துவமனைகள், தோட்டக்கலை சங்கங்கள் போன்ற பல்வேறு வகையான சங்கங்கள் உள்ளடங்குகின்றது.
இத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வ உரிப்புறிமை பெற்றுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் தொகை 13.89 இலட்சம் ஆகும். பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் 38, வியாபார அலகுகளுக்கிடையே இயங்கும் பங்குக் கடைகள் 46, எரிபொருள் நிலையங்கள் 43, மெகா கோப் சிடி 08, கோப் சிடி103, மினி கோப் சிடி 237, பிராந்திய 426, கிராமிய வங்கி 543 உள்ளடங்களாக கூட்டுறவுச் சங்க ஊழியர்களான 5741 மனித வளங்களை பயன்படுத்தி 48 இலட்ச வாடிக்கையாளர்களுக்கு உயரிய சேவையை வழங்குவது இத் திணைக்களத்தின் நோக்கமாகும். சிக்கன மற்றும் கடன் வழங்கள் கூட்டுறவுச் சங்கங்களினூடாக தத்தமது பகுதிகளிலுள்ள மக்களின் நிதி மற்றும் நலன்புரித் துறையினை அபிவிருத்தி செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.
இத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள்
1) 1998 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க மேல் மாகாண சபையின் கூட்டுறவு நியதிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தல்.
- கூட்டுறவுச் சங்கங்களைப் பதிவு செய்தல்.
- கூட்டுறவுச் சங்கங்களை ஒழுங்குபடுத்தல்.
- கூட்டுறவுச் சங்கங்களை அபிவிருத்தி செய்தல்.
- கூட்டுறவுச் சங்கங்களின் கணக்காய்வு.
- கூட்டுறவுச் சங்கங்களை ஆய்வு செய்தல்.
- கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான சட்ட மற்றும் தீர்ப்பளிக்கும் நடவடிக்கை.
- கூட்டுறவுச் சங்கங்களைக் கலைத்தல் மற்றும் பதிவினை இரத்துச் செய்தல்.
2) பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவத்ற்காக கூட்டுறவுத் தொழிலின் மூலம் வழங்கப்பட வேண்டிய பங்களிப்பினை வழங்குவதற்காக வழிகாட்டல்.
- பிராந்திய குழுக்களை/சபைகளை நியமிப்பது தொடர்பாக நடவடிக்களை மேற்கொள்ளல்.
- பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்வுகளை வழங்கல்.
- இயக்குனர் சபை மற்றும் பொதுச் சபையினை அடிக்கடி ஒன்றுகூட்டி தேவையான ஆலோசனைகளை வழங்கல்.
- சங்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கையகப்படுத்தல்/குத்தகைக்கு வழங்குவதற்கு அனுமதியளித்தல்.
- கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்கல்.
- கணக்குகளை மேற்பார்வை செய்தல் மற்றும் ஆலோசனை வழங்கல்.
- மாநில மத்தியஸ்தராக சங்கங்களின் அபிவிருத்திக்கு கடன் வழங்கல்.
- அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கல்/அனுமதியளித்தல் மற்றும் அவற்றை அமுல்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கல்.
- கூட்டுறவுத் தொழில் தொடர்பாக சமூகத்தினை மற்றும் பாடசாலை மாணவர்களை அறிவுறுத்தல்.
- கூட்டுறவுச் சேவையாளர் ஓய்வூதியத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தல்.
- கூட்டுறவுப் பயிற்சிப் பிரிவின் மூலம் திணைக்கள ஊழியர்கள்/சங்க ஊழியர்கள்/ சங்க உறுப்பினர்களுக்கு அவசியமான கூட்டுறவுப் பயிற்சிகளை வழங்குதல்.
கூட்டுறவுச் சங்க அபிவிருத்திக்காக கூட்டுறவுத் திணைக்களத்தின் மூலம் வறுமையைக் குறைத்தல் மற்றும் சேவை நலன்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
1) கூட்டுறவுத் தொழிலுக்கு இளைஞர் சக்தியை பெறும் நோக்கத்துடன் பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுதல் மற்றும் சீரற்ற முறையில் இயங்கும் பாடசாலை கூட்டுறவுச் சங்கங்களை உயர்த்துதல் மற்றும் ஊக்குவித்தல்.
2) பாடசாலை கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் கழிவு முகாமைத்துவத்திற்கு உதவி புரிதல், அதன் கீழ் பின்வரும் கட்டுமானத் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
- வாரத்தில் ஒரு நாள் வீடுகளில் சேரும் பிளாஸ்திக் போத்தல் மற்றும் பொலித்தீன் போன்றவற்றை சுத்தம் செய்து பாடசாலைக்கு கொண்டு செல்லல்.
- பாடசாலை கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மூலம் அவை சேகரிக்கப்படல்.
- அப் பொருட்களின் பாரத்திற்கேற்ப பாடசாலை கூட்டுறவுச் சங்கத்திற்கு/ பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு அல்லது பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகைப் பணம் செலுத்துதல்.
- பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம், தமது பிரதேசத்திற்குரிய பாடசாலைகள் மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்திக் போத்தல் மற்றும் பொலித்தீங்களை ஒன்று சேர்த்து மீள்சுழற்சி செய்யும் நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்தல்.
3) பொது மக்களின் தேவைக்கேற்ப ச.தொ.ச நிறுவனம், வரையறுக்கப்பட்ட யுனிலிவர் நிறுவனத்துடன் இணைந்து கோப் சிடி, மினி கோப் சிடி நிலையங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம், அத்தியாவசியப் பண்டங்களை விநியோகித்தல் மற்றும் நுகர்வோர் விவகாரப் பிரிவுகளை மேம்படுத்துவதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.
4) கூட்டுறவுச் சங்கங்களில் கணக்கீட்டுத் துறை தொடர்பான போதிய அறிவின்மையைக் குறைப்பதற்காக கணக்கியல் தொடர்பான பயிற்சித் திட்டங்களை நடத்துதல்.
5) மேல் மாகாண கூட்டுறவு நிதியத்தின் பங்களிப்பில் வறுமையை ஒழிக்கும் நோக்கத்துடன் குறைந்த வருமானம் பெறும் கூட்டுறவு அங்கத்தவர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு வீட்டு மானியங்கள் வழங்கும் வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்படுவதோடு, ஒரு வீட்டிற்கு கூட்டுறவு நிதியத்தின் மூலம் ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுவதோடு, மேலதிக நிதித் தேவையினை ஈடுசெய்யும் பொருட்டு கூட்டுறவுச் சங்கங்களினால் பங்களிப்புச் செய்யப்படுகிறது.
6) பத்தாயிரம் வீட்டுத் தோட்ட அபிவிருத்திக்கான வேலைத் திட்டத்திற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குவதோடு அதன் கீழ் சிறந்த கூட்டுறவுச் சங்கம், ஊழியர் வீட்டுத் தோட்டம், உறுப்பினர்/ அங்கத்தவர் தோட்டம் போன்றவை தெரிவு செய்யப்பட்டு, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பரிசு வழங்கல்.
7) மேல் மாகாணத்தின் பால் உற்பத்திக்கான கூட்டுறவுச் சங்கங்களை ஒன்றினைத்து சிறந்த பால் உற்பத்தியாளனை தெரிவு செய்வதோடு, அவரை ஊக்குவிப்பதற்காக பரிசு வழங்கல்.
மேலதிகத் தகவல்கள்
- திணைக்கள இணையப் பக்கத்தின் மூலம் பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கூட்டுறவு ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக வருடாந்தம் கூட்டுறவு விளையாட்டு வைபவம் நடாத்தப்படுகிறது.
- ஆரம்பம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் பதிவாளர்களின் கீழ் மேல் மாகாண கூட்டுறவு திணைக்களம் நிர்வாகிக்கப்பட்டுள்ளது.
ஊழியரின் பெயர் | நிர்வாகக் காலம் |
1. திரு.பீ.ரண்ஜித் பெரேரா | 1989 |
2.திரு.டபிலிவ்.எம்.எஸ்.விஜயகோன் | 1992 |
3. திருமதி.ஏ.எச்.அயிராங்கனி சமரவீர | |
4. திரு.எஸ்.ஏ.ஜீ.சகலஸூரிய | |
5. திரு.என்.பீ.கருனிரத்ன | |
6. திரு.எஸ்.எச்.ஹேவகே | |
7. திரு.டீ.டீ.உபுல் சாந்த த அல்விஸ் | 2009.07.29 ஆம் திகதியிலிருந்து 2014.04.04 ஆம் திகதி வரை |
8. திரு.பீ.என்.தம்மிந்த குமார | 2014.04.05 ஆம் திகதியிலிருந்து 2016.01.12 ஆம் திகதி வரை |
9. திரு.பீ.ஏ.ஏ.எஸ்.வீரசேகர | 2016.01.27 ஆம் திகதியிலிருந்து இன்று வரை |