நிருவாகப் பிரிவின் பங்களிப்பு

  1. திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களினதும் தனிப்பட்ட சுயவிபரக் கோவைகளை பராமரித்தல்.
    i. ஆட்சேர்ப்புச் செய்தல்
    ii. பதவியுயர்வு அளித்தல்
    iii. ஓய்வூதியமளித்தல்.
  2. திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களினதும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக செயற்பாடுகளை மேற்கொள்ளல்
  3. தலைமை அலுவலகம் மற்றும் உதவி ஆணையாளர் அலுவலகங்களின் வாகனம், அலுவலக உபகரணங்களை பராமாரித்தல் மற்றும் ஏனைய பராமாரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.
  4. திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களினதும் விடுமுறை தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.
  5. தபால் தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.

கணக்குப் பிரிவின் பங்களிப்பு

  1. கொடுப்பனவுi. சம்பளம் மற்றும் அதற்குரிய கொடுப்பனவு (நிலுவைச் சம்பளம் மற்றும் சம்பள ஏற்றம்)

    ii. விலைமனுக்கோரல் மற்றும் தொழிநுட்ப மதிப்பீட்டுக்குழுவின் தீர்மானத்திற்கு அமமைய கொள்வனவு செய்தல்.

    iii. பிரயாணச் செலவுக் கொடுப்பனவு.

  2. களஞ்சியச் சாலையை கொண்டு நடாத்தல்.
  3. கணக்கு தயாரித்தல்

    i. வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு

    ii. வருடாந்த முற்பணம் “பீ” கணக்கு

    iii. ஒதுக்கீட்டுக் கணக்கு

  4. திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கடன் கொடுப்பனவு (இடர் கடன், விழாக் கடன் மற்றும் விசேட முற்பணம்)
  5. திணைக்களத்தின் பொதுக்கணக்கு, சட்டச் செலவுக் கணக்கு, கூட்டுறவு நிதியம், கூட்டுறவுச் சங்கக் களைப்பு பொறுப்புக் கணக்கை கொண்டு நடாத்தல்.
  6. பிரதான அலுவலகம் மற்றும் உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும் கணக்காய்வு பரிசோதித்தலுக்குரிய விடைகளை தயாரித்தல்