சட்டம் மற்றும்  நிதிப் பிரிவின் பங்களிப்பு

  1. பல்வேறுபட்ட சச்சரவுகளை விசாரிப்பதற்காக      பொறுப்பேற்றல் தீர்ப்பாளர்களை நியமித்தல் விசாரனை செய்யப்பட்டுள்ள தீர்வுக் கோவைகளை பொறுப்பேற்றல் மற்றும் அவற்றை பரிசீலனை செய்தல்.
  2. எடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம் குற்றம் சாட்டப்பட்டவர் பணம் செலுத்தாமல் இருக்கும் போது சங்கத்தின் வேண்டுகோளின் படி உரிய சச்சரவ்ளவுக்காக நீதிமன்ற அதிகாரத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்தல்.
  3. நடுத்தீர்ப்பாளர்களின் தீர்மானத்திற்கு எதிராக கிடைக்கும் மேன்முறையீடுகளை கையேற்றல் மற்றும் விசாரணை செய்வதற்காக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பதிவாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் அதன் தீர்ப்பை வெளிப்படுத்தல்.
  4. நீதவான் நீதிமன்றத்தினால் நடுத்தீர்ப்பாளர்களின் தீர்ப்பை அமுல்படுத்தப்படும் போது முன்வைக்கப்படும் எதிர்ப்பு சம்பந்தமாக மீள் வழக்கொன்றை தொடருதல்.
  5. திணைக்களத்திற்கு எதிராக குறித்தொதுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தேவையான சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சட்டரீதியான விடயங்களுக்குத் தேவையான பொருள் கோடலைப் பெற்றுக்கொள்ளல்.
  6. நடுத்தீர்ப்பு கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கான தேவையான விதப்புரைகளை கணக்குப் பிரிவிற்கு வழங்குதல்.
  7. இணைவுச் சுற்று நிருபங்களை வெளியிடும் போது உரிய விதப்புரையை ஆணையாளருக்கு வழங்குதல்.