கிராமிய வங்கி செயற்பாடு தொடர்பான பயிற்சிநெறி
கூட்டுறவு வியாபாரத்தில் காணப்படும் சக்திவாய்ந்த மற்றும் முக்கியத்திவம் வாய்ந்த பிரிவு கிராமிய வங்கித் துறையாகும். இது அறுபது வருட பழைமையான வரலாற்றைக் கொண்டது. எப்படியாயினும் தினந்தோறும் நவீனமாகும் சமூகத்திற்கு மற்றும் தொழிநுட்பத்திற்கு இணையாக கிராமிய வங்கித் துறையின் மூலம் அதன் செயற்பாடுகளை புதுப்பிக்காமையினால் கிராமிய வங்கி நுகர்வோரிடமிருந்து தொலைவில் இருக்கும் அபாயத்தை எதிநோக்கியுள்ளது.
அதற்கமைய தற்காலத்தில் கிராமிய வங்கித் துறை எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் முகமாக “கிராமிய வங்கி செயற்பாடு தொடர்பான பயிற்சித் திட்டம்” மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரின் பணிப்புரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் முதல் நடவடிக்கையாக கொழும்பு மாவட்டத்திற்கான நிகழ்ச்சித் திட்டம் கொழும்பு மாவட்ட அனைத்து பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், கணக்காளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள்/ அதிகாரிகளின் பங்குபற்றலுடன் 2018 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மேல் மாகாண கூட்டுறவுப் பயிற்சிப் பிரிவில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாகாண ஆணையாளர், மாவட்ட உதவி ஆணையாளர் மற்றும் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சேவையாற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் இந் நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.