மேல் மாகாண பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான 2018 ஆம் ஆண்டின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம்.
மேல் மாகாண பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் 2018 ஆம் ஆண்டின் முன்னேற்ற ஆய்வினை மேற்கொள்ளும் முகமாக முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் சென்ற டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி பத்தரமுல்ல ரன்மகபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் திரு.லலித் வனிகரத்ன மற்றும் மேல் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் பதிவாளர் திரு.பீ.ஏ.ஏ.எஸ்.வீரசேகர ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேல் மாகாணத்தில் செயற்படும் ஒட்டுமொத்த பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை, சங்கம் 38 ஆகும். அவை இன்று வரை மாகாணத்தின் மக்களுக்கு நுகர்வு, வங்கி போன்ற பல்வேறு பிரிவுகளின் ஊடாக பாரிய சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத் தொழிலை மேம்படுத்தி, அவற்றின் சேவைகளை மென் மேலும் பொது மக்களுக்கு நெருக்கமாக்குவதற்கு அர்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.