உதவி ஆணையாளர் அலுவலகங்களின் மூலம் வழங்கப்படும் சேவைகள்

  1. குறிப்பிட்ட மாவட்ட நிர்வாக எல்லைக்கு உட்பட்ட தகுதி பெற்ற அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் பதிவு செய்தல்.
  2. பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்களை மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல்.
  3. சங்கங்களில் கணக்கீட்டு ஆண்டு முடிவில் சட்டரீதியான கணக்காய்வினை மேற்கொள்ளல்.
  4. செயற்படா சங்கங்களை கலைக்கும் முகமாக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் (மே.மா) அவர்களுக்கு அவசியமான பரிந்துரைகள் மற்றும் தகவல்களை வழங்கல்.
  5. கூட்டுறவுச் சங்கங்களில் இடைக்கால ஒப்பந்தங்கள், குழு ஆணை, கிராமிய வங்கி செயற்பாட்டு விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளல்.
  6. கூட்டுறவுச் சங்கங்களின் நிலையான சொத்துக்கள், அசையாச் சொத்துக்களை கையகப்படுத்தல், குத்தகைக்கு கொடுத்தல், வாடகைக்குக் கொடுத்தல் மற்றும் அகற்றுவதற்கு அவசியமான அனுமதியை வழங்கல் அல்லது நிதி ரீதியாக பெறுமதியற்ற நிலையை அடையும் போது கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் (மே.மா) அவர்களுக்கு அவசியமான பரிந்துரைகளை வழங்கல்.
  7. கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அழித்தல் மற்றும் நிதி ரீதியான பெறுகைகளுக்கு அவசியமான பரிந்துரைகளை வழங்கல் மற்றும் அத் திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தல்.
  8. உதவி ஆணையாளரின் விருப்பத்திற்கேற்ப கூட்டுறவுச் சங்கங்களில் பொதுக் கூட்டம், பணிக்குழுக் கூட்டம், இயக்குனர் குழுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்/ அழைத்தல் மற்றும் ஆலோசனை வழங்கல்.
  9. கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்/ நடத்துதல், அதன் அடிப்படையில் இயக்குனர் சபை, நிர்வாகக் குழு போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுத்தல்.
  10. இயக்குனர் சபையினை நியமிப்பதற்கு அவசியமான பரிந்துரை மற்றும் இரகசிய அறிக்கையினை ஆணையாளர் நாயகத்திற்கு வழங்குதல்.