நிருவாகப் பிரிவின் பங்களிப்பு
- திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களினதும் தனிப்பட்ட சுயவிபரக் கோவைகளை பராமரித்தல்.
i. ஆட்சேர்ப்புச் செய்தல்
ii. பதவியுயர்வு அளித்தல்
iii. ஓய்வூதியமளித்தல். - திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களினதும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக செயற்பாடுகளை மேற்கொள்ளல்
- தலைமை அலுவலகம் மற்றும் உதவி ஆணையாளர் அலுவலகங்களின் வாகனம், அலுவலக உபகரணங்களை பராமாரித்தல் மற்றும் ஏனைய பராமாரிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.
- திணைக்களத்தின் சகல உத்தியோகத்தர்களினதும் விடுமுறை தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.
- தபால் தொடர்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.
கணக்குப் பிரிவின் பங்களிப்பு
- கொடுப்பனவுi. சம்பளம் மற்றும் அதற்குரிய கொடுப்பனவு (நிலுவைச் சம்பளம் மற்றும் சம்பள ஏற்றம்)
ii. விலைமனுக்கோரல் மற்றும் தொழிநுட்ப மதிப்பீட்டுக்குழுவின் தீர்மானத்திற்கு அமமைய கொள்வனவு செய்தல்.
iii. பிரயாணச் செலவுக் கொடுப்பனவு.
- களஞ்சியச் சாலையை கொண்டு நடாத்தல்.
-
கணக்கு தயாரித்தல்
i. வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு
ii. வருடாந்த முற்பணம் “பீ” கணக்கு
iii. ஒதுக்கீட்டுக் கணக்கு
- திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கடன் கொடுப்பனவு (இடர் கடன், விழாக் கடன் மற்றும் விசேட முற்பணம்)
- திணைக்களத்தின் பொதுக்கணக்கு, சட்டச் செலவுக் கணக்கு, கூட்டுறவு நிதியம், கூட்டுறவுச் சங்கக் களைப்பு பொறுப்புக் கணக்கை கொண்டு நடாத்தல்.
- பிரதான அலுவலகம் மற்றும் உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும் கணக்காய்வு பரிசோதித்தலுக்குரிய விடைகளை தயாரித்தல்