கூட்டுறவுச் சங்க அபிவிருத்திப் பிரிவின் பங்களிப்பு
- கூட்டுறவுச் சங்கங்களின் மனிதவள மதிப்பீட்டை அனுமதித்தல் மற்றும் திருத்தம் செய்தல்
- கூட்டுறவுச் சங்கங்களின் பணிப்பாளர் குழுவை நியமித்தல் மற்றும் அகற்றலை மேற்கொள்ளல்.
- கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளாரின் முன் அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் துணை விதிகளை திருத்தம் செய்தல்.
- கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களுக்கு அனுமதியை வழங்க முடியாதுள்ள நிதிப் பெறுமதியைக் கொண்டுள்ள சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு மற்றும் அகற்றுவதற்கும் அனுமதியை வழங்குதல்.
- கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்களுக்கு அனுமதியை வழங்க முடியாதுள்ள நிதி பெறுமதியைக் கொண்டுள்ள நிர்மாணப் பணிகளுக்கான அனுமதியை வழங்குதல்.
- கூட்டுறவுச் சங்கங்களின் பணிப்பாளர் குழு மற்றும் பணிக் குழுவினர்கள் வெளிநாடு செல்வதற்கும் மற்றும் செலவு செய்வதற்கும் அனுமதியை வழங்குதல்.
- கூட்டுறவு நிதியத்திலிருந்து கூட்டுறவுச் சங்கங்களுக்கு கடன் வழங்குவதற்குத் தேவையான அனுமதியை வழங்குதல்.
- கூட்டுறவுச் சங்கங்களுக்கு புதிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதியை வழங்குதல்.
- கூட்டுறவுச் சேவை ஆணைக்குழு கூட்டுறவு அபிவிருத்தி நேரடி திணைக்களம் மற்றும் ஏனைய கூட்டுறவு தொழில் தொடர்பான நிறுவனங்களுக்குத் தேவையான அறிக்கையை வழங்குதல் மற்றும் கூட்டுறவுச் சங்கம் மற்றும் நிறுவனங்களுகிடையில் இணைப்புகளை ஏற்படுத்தல்.
- பொதுமக்களின் முறையீடுகள் மற்றும் சங்கங்களில் ஊழல் முறைகேடுகள் மோசடிகள் போன்றவற்றிற்குரிய பரிசீலனைகளை உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு விதப்புரையுடனான் அறிக்கைகளை பிரிவுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்தல்.
- பிரிவுகளின் செயற்பாடுகளுக்குரிய சுற்று நிருபங்களை வழங்குவதற்கான தேவையான விதப்புரையை கூட்டுறவுச் சங்க அபிவிருத்தி ஆணையாளருக்கு வழங்குதல்.
- மேல்மாகாண அதிகார எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்களை பதிவு செய்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் அபிவிருத்தி அலுவல்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
Scroll to top